உள்ளூர் செய்திகள்

முதல் பெண், ஸ்கிப்பர்!

இந்தியாவின் முதல் பெண், 'ஸ்கிப்பர்' என்ற பெயர் பெற்றவர், கே.கே.அரிதா. மீன்பிடி கப்பலின் கேப்டனுக்கு தான், 'ஸ்கிப்பர்' என்று பெயர்.கேரள மாநிலம், ஆலப்புழா, எருமல்லுார் என்ற கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான குஞ்சப்பனின் மகள் தான், இவர். மகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, கல்லுாரியில் மீன் வளத்துறை படிப்பில் சேர்த்தார், குஞ்சப்பன்.ஆரம்பத்தில், அந்த துறை படிப்பில் ஆர்வமில்லாதவராக இருந்த அரிதா, அதன்பின் ஈடுபாட்டுடன் படித்து, மீன்பிடி கப்பலின் கேப்டனாகவும் ஆனார்.கப்பல் பயணத்தை பற்றி குறிப்பிடும்போது, 'விடியற்காலையில், கடலிலும், வானத்திலும் தோன்றும் வர்ண ஜாலங்களை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்...' என்கிறார், அரிதா. —ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !