உணவே மருந்து!
தினமும் உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்வதால், நம் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். பெரும்பாலான காய்கறிகளில் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துகளே அதிகமாக உள்ளது. அதில் சில காய்கறிகளின் பயன்கள்:சுரைக்காய் சாப்பிட்டால், உடல் சோர்வை நீக்கும். மேலும், இது வயிற்றில் கொழுப்பை குறைக்க உதவுகிறதுஉருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால், மலச்சிக்கல் வராமல் தடுக்கும்அடிக்கடி வாழைத்தண்டை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் பாதையில் ஏற்படும் கல்லை அகற்றும்வாழைப்பூ மலச்சிக்கலை போக்கும் சிறந்த மருந்து. வாழைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்குடை மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால், அஜீரணத்தை போக்கும்சவ்சவ் காய் சாப்பிட்டு வந்தால், எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்தும்வெண்டைக்காயிலுள்ள சத்துக்கள், மூளை வளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகிறது. எனவே, வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்கோவைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், வாய் மற்றும் நாக்கு புண்களை குணப்படுத்தும்சேப்பங்கிழங்கு சாப்பிட்டு வந்தால், எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்தும்.தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்