உள்ளூர் செய்திகள்

அமைதியான வாழ்க்கை கிடைக்க...

தினமும் இவைகளை செய்தால், நிம்மதியாக, ஆரோக்கியமாக வாழலாம்...* தினமும், 10 - 30 நிமிடங்கள் வரை நடை பயிற்சி செல்லுங்கள்; அவ்வாறு செல்லும்போது, சிரித்த முகத்துடன் செல்லுங்கள்* எந்த சிந்தனைகளும் இன்றி, 10 நிமிடங்களாவது அமைதியாக, கண்ணை மூடி அமருங்கள்* தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள். எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம் மற்றும் கருணை ஆகிய குணங்கள் மனதில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்* உங்களுக்கு பிடித்த, சதுரங்கம், புதிர் போன்ற விளையாட்டை சிறிது நேரம் விளையாடுங்கள். ஆன்மிக மற்றும் அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை படியுங்கள்* உங்கள் தினசரி அலுவலில், தியானம், யோகா மற்றும் வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை, உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்* உங்கள் ஓய்வு நேரத்தை, 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்* மரம், செடி, கொடிகளில் விளையும் உணவுப் பொருட்களை, பச்சையாக நிறைய உண்ணுங்கள்* தினசரி, மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப் படுத்துங்கள்* உங்களுக்குள், உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள். எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல், வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்* உங்கள் மனதில், நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி, வாழ்கிற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்* உங்களின் காலை உணவை, அரசன் போலவும்; மதிய உணவை, இளவரசன் போலவும்; இரவு உணவை, பிச்சைக்காரன் போலவும் உண்ணுங்கள்* நன்றாக வாய் விட்டு சிரியுங்கள்* வாழ்க்கையை, 'டேக் இட் ஈசி'யாக எடுத்துக் கொள்ளுங்கள். அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்* உங்களின் கடந்த கால வாழ்க்கையை, மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து, அவருக்கு நன்றி செலுத்துங்கள்* மற்றவர்களின் வாழ்க்கையுடன், உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர் * எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்க தயாராக இருங்கள்* உங்களுடைய இன்பத்தில் பங்கெடுக்கும் அனைவரையும், அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம், நிரந்தரமாக தொடர்பில் இருங்கள்* உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காதவை எதுவாக இருந்தாலும், அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்* வாழ்வின் உன்னதம் ஏற்கனவே, உங்களுக்கு முழுவதுமாக வந்து விட்டது என்று நம்புங்கள்* எத்தனை, 'பிசி'யாக இருந்தாலும், குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்* மற்றவருக்கு பயனளிக்கும் வகையில், தினசரி ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்* நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து, எந்த செயலிலும் துணிந்து இறங்குங்கள்* துாங்கும் முன், மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த, இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.- பி. பாலாஜி கணேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !