முதியவர் யார் என தெரிகிறதா?
படத்தில், முதியவர் ஒருவரை, காலால் மிதித்து, 'பெண்டு' எடுக்கிறார் ஒருவர். இந்த முதியவர் யார் என தெரிகிறதா? முன்னாள் பிரதமரும், இந்நாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் தந்தையுமான தேவகவுடா தான். 'உடற்பயிற்சி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்; அது தான், என் இளமையின் ரகசியம்...' என்று அடிக்கடி அறிக்கை விடுத்து கதிகலங்க வைப்பவர். சாப்பிடாமல் கூட இருப்பார்; ஆனால், இதுபோன்ற உடற்பயிற்சிகளை செய்யாமல் இருக்க மாட்டார் என்று, இவரை பற்றி சொல்கின்றனர்.— ஜோல்னாபையன்.