எப்படி எல்லாம் கல்லா கட்டுறாங்க!
ரஷ்யா மற்றும் துருக்கியின் எல்லையில் அமைந்துள்ள நாடு ஜார்ஜியா. இங்கு, மூட நம்பிக்கை அதிகம். அதுவும், 'மொபைல் போன்கள், சைத்தானின் கருவி...' என்ற பிரசாரம், இங்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன்கள் வாங்குவதை, பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். ஆனால், விற்பனையாளர்கள், கில்லாடிகள் அல்லவா!தங்கள் கடைகளுக்கு பாதிரியார்களை அழைத்து வந்து, மொபைல் போன்களை ஆசிர்வதிக்கும்படி கூறி, அதன் பின் விற்பனை செய்கின்றனர். வாடிக்கையாளர், தமக்கு பிடித்த மொபைல் போனை தேர்வு செய்து, அதற்கான தொகையை செலுத்தி விட்டால், அவர் கண் முன்பாகவே, மொபைல் போனை, ஆசிர்வதித்து வழங்குகிறார் பாதிரியார்.இதன் மூலம், மொபைல் போனில் இருந்த சைத்தான் அகன்று விட்டதாக வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர். இந்த புதுமையான நடவடிக்கையால், தற்போது, மொபைல் போன் விற்பனை, அதிகரித்துள்ளதாக, விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.— ஜோல்னாபையன்.