சொன்ன பேச்சை கேட்காவிட்டால் இப்படித் தான்!
உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும், கொரோனா வைரஸ், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமையும் விட்டு வைக்கவில்லை. வைரஸ் பரவாமல் இருக்க, வியட்நாம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஹனாய் நகரைச் சேர்ந்த ஒரு சிறுவன், ஊரடங்கு உத்தரவை மீறி, அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் சென்று வந்தான். அவனது தந்தை, பலமுறை எச்சரித்தும், அவன் கேட்கவில்லை. ஆத்திரம் அடைந்த தந்தை, சிறுவனின் தலையை, வயதானவர்களுக்கு இருக்கும் வழுக்கை தலை போல், மொட்டை அடித்து விட்டார். இதனால், வெளியில் செல்ல வெட்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறான், அந்த சிறுவன். அரைகுறையான மொட்டை தலையுடன் சிறுவன் தோன்றும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. — ஜோல்னாபையன்.