உள்ளூர் செய்திகள்

காடுகளை அழித்தால்...

வட பிரேசில் நாட்டில், 'மழை வனங்கள்' என்றழைக்கப்படும் காட்டுப்பகுதியில், கபோர் என்ற பழங்குடி மக்கள், 2,200 பேர் வசிக்கின்றனர். அம்பு, வில், ஈட்டி, வாள் மற்றும் பழங்கால துப்பாக்கிகளே இவர்களது ஆயுதங்கள்.சமீபத்தில், 'கார்டியன்' ஆங்கில பத்திரிகை நிருபர்கள் இங்கு வந்த போது, 'நாங்க உங்களுடைய மாடுகளை திருடுவதற்காக தாக்குதல்கள் நடத்துவதில்லை. எங்கள் காடுகளை அழிக்க வருவோரையும், அவர்களது வாகனங்களையும் மட்டுமே கொளுத்துவோம்...' என்று கடுமையாக எச்சரித்துள்ளார், இப்பழங்குடி இனத் தலைவர். அந்நாட்டு அரசும், பழங்குடியினர் மற்றும் காடுகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இங்குள்ள நிலையோ...— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !