உள்ளூர் செய்திகள்

குழாயை திறந்தால் ஜூஸ்!

நம் ஊர் குழாயை திறந்தால், பல இடங்களில் தண்ணீருக்கு பதிலாக, காற்று தான், 'புஸ் புஸ்' என்று வரும். ஆனால், ஜப்பானில், குழாய்களை திறந்தால், பழச்சாறு கொட்டுகிறது. விமான நிலையங்கள், 'மால்'கள் மற்றும் நிறைய பேர் வந்துபோகும் இடங்களில், இதுபோன்று, ஆங்காங்கே குழாய்கள் இருக்கும். இவற்றை திறந்தால், ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழச்சாறு வகைகள் எந்த கலப்படமும் இல்லாமல், 'ஜில்' என்று வரும். இதற்கு, பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. படிக்கும்போதே, 'ஜில்'லுன்னு, ஜூஸ் குடிச்சா மாதிரியே இருக்கே... நம்மூரிலும் இதெல்லாம் வருமா!- ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !