கருத்து கந்தசாமி!
தலைவர்கள் பாடினால்...ஜெயலலிதா: தொட்ட இடம் துலங்கவரும்... வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்...கருணாநிதி: ஸ்டாலின் மற்றும் கனிமொழியை பார்த்தபடி, தங்கங்களே... நாளை தலைவர்களே.... நம் தேசம் காப்பவர் நீங்கள்!விஜயகாந்த்: மனைவி ஒரு மந்திரி... அவதானே ராஜதந்திரி...ம.ந., கூட்டணி: முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக...'நோட்டா'வுக்கா உங்கள் ஓட்டு?யாருக்கும் ஓட்டளிக்க விருப்ப மில்லையெனில், வீட்டிலேயே இருந்து கொள்ளலாமே!'நோட்டா'வுக்கு ஓட்டளிப்பதும், செல்லாத ஓட்டு என்று தானே மறைமுக அர்த்தமாகிறது.தயவு செய்து, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்கவும். ஓட்டுரிமையை கேலிக் கூத்தாக்காதீர்!