கவிதைச்சோலை! - பார்த்துக்கொள் அம்மா!
கருவில் சுமக்கும் வரையில் தான்உன் கவனம் குழந்தை மீதிருக்குமா...மடி தவழும் மட்டும் தான்உன் மனம், மகளின் மீது குவிந்திருக்குமா?புத்தகம் சுமந்து, பள்ளி செல்கையில்பறக்க விட்டு விடுவாயாஉன் மகளின் மீதான பாதுகாப்பு வளையத்தை!காய் நறுக்கவும், சோறு சமைக்கவும்செலுத்தும் கவனத்தை விடகொஞ்சம் கூடுதலாய் செலுத்துஉன் மகளின் மீதான நெருப்பு வளையத்தை!தொலைக்காட்சி தொடர்களில்உன் அகத்தை வைத்துமகளின் எதிர்காலத்தைதொலைத்து விடாதே!உன் மகள் சிறகசைக்கும் திசையெங்கும்உன் சிந்தனையை செலுத்து...உறக்கத்தில் கூட விழித்திருக்கட்டும்உன் மகளை பற்றிய பொறுப்புணர்வு!நல்லதும் கெட்டதும் நிறைந்த உலகில்மனிதர்கள் மட்டுமல்லமனித உருகொண்ட மிருகங்களும் உண்டெனமகளுக்கு புரிய வை!துரியோதனன் பரம்பரையில்பிறந்துவிட்ட ஆண்கள் சிலருக்குதுகிலுரிக்கும் புத்தி போகவே இல்லை...அவர்கள், பெண்ணின் சதை உரித்துப் பார்க்கசமயம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!ஹாசினி ஆசிபாவோடுஅரும்புகள் கருகிய கதை போகட்டும்பார்த்துக்கொள் அம்மா கவனமாய்...உன் பெண்ணிற்கு எத்தனை வயதானாலும்!— இ.எஸ்.லலிதாமதி, சென்னை.