இதப்படிங்க முதல்ல..
15 கெட்டப்பில் வடிவேலு!எலி என்ற படத்தில் புலனாய்வு அதிகாரி வேடத்தில் நடிக்கும் வடிவேலு, அதற்காக, 15 கெட்டப்புகளில், தன் ஹேர் ஸ்டைலை மாற்றி நடிக்கிறார். மேலும், முந்தைய படமான, தெனாலிராமனில் தன் காமெடி, ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு மாறாக எரிச்சலை ஏற்படுத்தியதால், இந்த முறை நல்ல காமெடியாக தர வேண்டும் என்பதற்காக, தன் காமெடி இலாகாவை மீண்டும் ஒன்று கூட்டியிருக்கிறார்.— சினிமா பொன்னையாதுகிலுரிந்து நிற்கும் பிந்து மாதவி!தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வந்த பிந்துமாதவி, தமிழில், கழுகு படத்தில் ஹோம்லியாக நடித்ததை தொடர்ந்து, சில இயக்குனர்கள் கவர்ச்சியாக நடிக்க கேட்ட போது, மறுத்து வந்தார். ஆனால், இப்போது அவரது மார்க்கெட் தள்ளாடுவதால், இவரே சில கமர்ஷியல் பட அதிபர்களை சந்தித்து, 'கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன்...' என்று தேடிச் சென்று படவேட்டை நடத்தி வருகிறார். அதோடு, தமன்னா நடித்தது போன்று டூ பீஸ் மற்றும் பிகினி உடையணிந்து நடிக்கவும் தயார் என்று பச்சைக் கொடி காட்டியுள்ளார். காலம் அறிந்து ஞாலம் ஒழுகு!— எலீசாஜீவாவுக்கு சிபாரிசு செய்த விஜய்!பெரும்பாலும் நடிகைகளுக்கு, நடிகர்கள் சிபாரிசு செய்வது தான் வழக்கம். ஆனால், சமீபகாலமாக, அந்த நிலையில் மாற்றம் ஏற்படத் துவங்கியிருக்கிறது. குறிப்பாக, ஆர்யா தன்னிடம் வரும் நல்ல கதைகளை விஷாலிடம் அனுப்பி விடுகிறார். அதேபோல், விஷாலோ, விக்ராந்தை வைத்து படம் தயாரிக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கத்தி படத்துக்கு பின், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்யிடம் ஒரு நிறுவனம் சமீபத்தில் கால்ஷீட் கேட்டுள்ளது. அதற்கு, 'தற்சமயம் உங்கள் கம்பெனி படத்தில் நடிக்க இயலாது. அதனால், ஜீவாவை வைத்து ஒரு படம் செய்யுங்கள்; அந்த படம் முடிந்ததும் நான் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன்...' என்றார். விஜய்யின் இந்த சிபாரிசால், யான் படத்தின் தோல்வியால் படமில்லாமல் இருந்த ஜீவா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.— சி.பொ.,அரை நிர்வாணமாக காஜல் அகர்வால்!நண்பேன்டா படத்திற்கு வாங்கிய, முன் பணம், 40 லட்ச ரூபாயை திருப்பித்தர மறுத்து விட்டதால், காஜல் அகர்வால் மீது தென்னிந்திய பட அதிபர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், புதிதாக படங்களே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் அவர், ஒன்றரை கோடி சம்பளம் கேட்டு வந்தவர், 'இப்போது ஒரு கோடி கொடுத்தாலும் போதும்; படுகவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்...' என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார். முன்னதாக, ராம்சரணுடன் நடித்துள்ள ஒரு தெலுங்கு படத்தில் கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக நடித்திருப்பதாக சொல்லி, அந்த புகைப்படங்களையும், பட அதிபர்களின் பார்வைக்கு வைத்து, ஆதரவு திரட்டி வருகிறார் காஜல் அகர்வால். காடு காத்தவனும், கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்!— எலீசாரஜினி - கமல் ரசிகர்கள் மோதல்!இப்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பேனர் கட்டுவதற்கும், கட்-அவுட் வைப்பதற்கும் மோதிக்கொள்வதைப் போன்று, ஒரு காலத்தில் ரஜினி - கமல் ரசிகர்கள் கடுமையாக மோதிக்கொண்டிருந்தனர். ஆனால், நாளடைவில் அது மறைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பொங்கலுக்கு ரஜினியின், லிங்காவும், கமலின், உத்தம வில்லனும் திரைக்கு வர இருப்பதால், மீண்டும் இவர்களுடைய ரசிகர்களுக் கிடையே மோதல் வெடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காரணம், சில ஏரியாக்களில் மேற்படி படங்களின் சுவர் விளம்பரங்களுக்காக இப்போதே, அவர்களுக்கிடையே போட்டி உருவாகி இருக்கிறது. அதனால், பொங்கல் நெருங்கும் நேரத்தில் மோதல் வெடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!'தாரா நடிகை தான் என் கனவுக்கன்னி...' என்று கூறி வந்த ஜெயமான நடிகர், இப்போது அவருடனேயே ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால், தன் கனவுகளையெல்லாம் நனவாக்கும் வகையில், அம்மணியுடன் ஒட்டல், உரசல் என்று உறவாடி வருகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்படத்தின் இயக்குனரான நடிகரின் சகோதரர், 'ரொம்ப டீப்பா போயிடாதே தம்பி; அப்புறம் உடம்புக்கு ஆகாம போயிடும்...' என்று, அறிவுரை கூறி வருகிறார்.நடிகையின் வாழ்க்கையை சொல்லும் படத்தில் நடித்த, கான் நடிகைக்கு, தற்போது தென்னிந்திய மொழிகளில் படமில்லாததால், மும்பையில் முகாமிட்டுள்ளார். அதோடு, அங்குள்ள பிரபல கான் நடிகர்களுக்கும், அவ்வப்போது பார்ட்டி கொடுக்கிறார். இந்த செய்தி மும்பையிலுள்ள ஒரு பத்திரிகையில் வெளியானதால் அதிர்ச்சியடைந்த நடிகை, தன்னால் கான் நடிகர்களின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, 'என்னுடன் பார்ட்டியில் கலந்து கொண்டது நடிகர்கள் அல்ல; என் பாய் ப்ரண்டுகள்...' என்று சொல்லி, சர்ச்சையை திசை திருப்பி விட்டுள்ளார்.துளிகள்!* உடம்பில் கொழுப்பு சேராமல் இருப்பதற்காக, தினமும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்து வருகிறார் நயன்தாரா.* ஒரு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்று நடிகை சனாகானும், அவரது காதலர் இஸ்மாயில் கானும் மும்பையில் கைதாகி, விடுதலையாகியிருக்கின்றனர்.* இசை படத்தில் அறிமுகமாகியுள்ள சாவித்ரிக்கு, 'என் படம் வெளியான பின் தான், புதிய படங்களில் ஒப்பந்தமாக வேண்டும்...' என்று நிபந்தனை விதித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.* 'ஜோடி நடிகை இல்லாத கதைகளில் நடிப்பது தான், எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது...' என்கிறார் விஜயசேதுபதி.அவ்ளோ தான்!