உள்ளூர் செய்திகள்

மஹாராஷ்டிராவில் மகர சங்கராந்தி!

மஹாராஷ்டிரா மாநிலத்தில், மகர சங்கராந்தி பண்டிகையின்போது, கருப்பு எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்புகளை பரிமாறி கொள்வர். மராத்தியர்கள், கருப்பு எள்ளை புனிதமாக கருதுவதால், அன்றைய நாளில் சில பழமைவாதிகள், கருப்பு நிற உடைகளை அணிவதை பாரம்பரியமாக கடைப்பிடிக்கின்றனர். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் புத்தாடை உடுத்துவர்.சொந்த நிலம் வைத்திருப்போர், கரும்பு, வெல்லம் மற்றும் எள்ளை பானையில் வைத்து பூஜை செய்வர். நகரவாசிகள், மாலையில், வெல்லம், எள் மற்றும் கரும்பு துண்டுகளை ஒரு சிறிய பானையில் போட்டு பூஜை செய்து, அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரவழைத்து, சிறு பானைகளை கொடுக்கின்றனர். இந்த நாளிலிருந்து காற்று வீச துவங்குவதால், பல்வேறு நிறங்களில் விதவிதமான பட்டங்களை செய்து, மாலையில், பறக்க விடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !