மிஷேல், பாரீஸ் லட்சுமியானார்!
இந்திய பெண் போல காட்சியளிக்கும் இவர், ஒரு பிரான்சு நாட்டு பிரஜை என்றால் நம்ப முடிகிறதா? பாரீஸ் நகரை சேர்ந்த மிஷேலுக்கு, இந்திய கலைகள் மீது அதிக ஆர்வம். குறிப்பாக, பரத நாட்டியம். பாரிசில் ஒரு நடன ஆசிரியையிடம் முறைப்படி பரதம் கற்றார். மேலும், நடனம் பற்றி தெரிந்து கொள்ள, சென்னை வந்து, பத்மா சுப்ரமணியத்தின் சிஷ்யை ஆனார். அப்போது தான், கேரளாவை சேர்ந்த, 'கதகளி' கலைஞர் சுனிலுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம், காதலாக மாறியதால், திருமணம் செய்து கொண்டனர்.மிஷேல் என்ற தன் பெயரை, பாரீஸ் லட்சுமி என்று மாற்றிக் கொண்டார். இன்று பல்வேறு நாடுகளுக்கு சென்று, பரதநாட்டியம் ஆடி வரும் இவர், சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். — ஜோல்னாபையன்.