உள்ளூர் செய்திகள்

இன்றும் மன்றோ!

அமெரிக்காவில் உள்ள, பெவலி ஹில்சில் ஏலம் விடப்பட்ட, மர்லின் மன்றோவின் புகைப்படம் ஒன்று, மூன்றரை லட்சம் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. மறைந்த ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோ, திரைப்பட நடிகையாகி விட வேண்டும் என ஆசைப்பட்டு முயற்சித்துக் கொண்டிருந்த, 1946ல், எடுக்கப்பட்ட புகைப்படம் அது.'ப்ளூ புக் மாடலிங் ஏஜன்சி' என்ற மாடலிங் நிறுவனத்தில் உறுப்பினராக பதிவு செய்து, வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த மன்றோவின் தலைமுடி, பிரவுன் வண்ணத்தில் இருந்தது. அவரது முக அழகுக்கு, கோல்டன் வண்ண தலைமுடி தான் பொருத்தமாக இருக்கும் என கருதிய பிரபல புகைப்பட நிபுணர் நார்மா ஜீன், மன்றோவின் தலைமுடிக்கு, தங்க வண்ண டை அடித்து எடுத்த அந்த புகைப்படம் தான், மர்லின் மன்றோவுக்கு, 'ட்வன்டியத் செஞ்சுரி பாக்ஸ்' திரைப்பட நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தந்தது. அதை தொடர்ந்து, அவர் உலகப் பிரசித்தி பெற்ற நடிகையானார்.இந்த புகழ் காரணமாகவே இப்புகைப்படம், மூன்றரை லட்சம் டாலருக்கு விற்பனையாகியுள்ளது.யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்!— ஜோல்னா பையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !