மலை வழிகாட்டி!
பெண்கள் மலையேறுவது சிரமம் என்று நினைக்கும்போது, இமயமலை ஏறுவதையே தொழிலாக தேர்வு செய்திருக்கிறார், அனுஷெரின் என்ற பெண். படிப்பு முடித்து, வேலை தேடினார், அனு. உத்தராஞ்சலில் வேலை இருப்பதாக நண்பர் கூற, திருச்சூரிலிருந்து ரயில் ஏறினார்.வேலையில் இருந்தபோது தான், இமயமலை ஏறும் சுற்றுலா பயணியரை கவனித்திருக்கிறார். வழிகாட்டியாக இருக்க, அரசு சான்றிதழ் பெற வேண்டும். வட காசியில் உள்ள நிறுவனம் ஒன்றில் சேர்ந்து, மலையேறும் பயிற்சியில் சான்றிதழ் பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார். 'பெண்கள் அதிகம் விரும்பாத இந்த பணியில் சேர்ந்து, பனி மலைகளில் ஏறும்போது, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்...' என்கிறார், அனு ஷெரின்.— ஜோல்னாபையன்