நவராத்திரியின்போது புட்டு செய்வது வழக்கம். பலருக்கு புட்டு மிருதுவாக செய்ய வராது. அதனால், மாவை முதலில் நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். ஆறிய பிறகு வெதுவெதுப்பான நீர் சேர்த்து பிசறி, மாவை தயார் செய்ய வேண்டும். அதை ஆவியில் வேக வைத்து புட்டு தயாரித்தால், மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.* ஒரு கப் பாசிப் பருப்பை நெய் விட்டு வாசனை வரும் வரை நன்றாக வறுத்த பின், குக்கரில் வேக வைத்து எடுக்கவும். அதனுடன், அரை அல்லது முக்கால் கப் பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். அதில், ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும், ஏலப்பொடி, முந்திரி, திராட்சை சேர்க்க, ருசியான பாயசம் தயார்.
சுண்டல் டிப்ஸ்!
பச்சைபயறு, காராமணி சுண்டல்களுக்கு வெல்லமும், தேங்காய் துருவலும்; கொண்டைக் கடலைக்கு, காரப்பொடியும் சேர்த்தால் ருசி அலாதியாக இருக்கும்* கடலையை வேக வைக்கும்போது சோடா உப்பு சேர்க்கக் கூடாது* சுண்டல் வகைகளை வேக வைக்கும்போதே உப்பு சேர்த்தால், சில சமயம் நறுக் நறுக்கென்று இருக்கும். இதற்கு சுண்டலை அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன், உப்பு துாளை போட்டு நன்றாக கிளறி விடலாம்; சுண்டல் மெத்தென்று இருக்கும்* வெந்த அமெரிக்கன் சோளத்தில், சிறிதளவு மிளகு துாள், தேய்காய் துருவல் சேர்த்தால், வித்தியாசமான சுண்டல் ரெடி* எந்த வகை சுண்டல் செய்தாலும், மேல் தோல் வெடிக்கும் வரை வெந்திருந்தால், சாப்பிடுபவர்களுக்கு அஜீரணம் வராது* வெந்த சோயா பீன்சுடன், வதக்கிய குடைமிளகாய், துருவிய சீஸ் சேர்த்தால், குழந்தைகளுக்கு பிடித்த சுண்டல் ரெடி.