பந்தா காட்டாத ஓம்பூரி!
பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி, ஆடு புலியாட்டம் என்ற மலையாள படத்தில் நடிப்பதற்காக, கேரளா வந்திருந்தார். இவருக்கு ஆடம்பர ஓட்டலில் அறை ஒதுக்கிய தயாரிப்பாளர், மற்ற முன்னணி நடிகர்களுக்கு, குறைந்த வாடகையில் அறைகள் ஒதுக்கினார். மறுநாள் காலையில், இயக்குனர் அறைக் கதவை தட்டினார், ஓம்பூரி. 'வசதி போதாது...' என, புகார் கூற வந்திருப்பதாக நினைத்து, மிரண்டு போனார், இயக்குனர். ஆனால், அறைக்குள் வந்த ஓம்புரி, 'என்ன இப்படி செய்திட்டீங்க... எனக்கு மட்டும் ஏன் அந்த ஓட்டல்; மற்ற நடிகர்களுடனேயே தங்கியிருப்பேனே...' என்று வருத்தப்பட்டார்.பந்தா நடிகர்கள் மத்தியில், இப்படியும் ஒரு பிரபலமா!— ஜோல்னாபையன்.