திண்ணை
மணிவாசகர் பதிப்பகம் வெளியீடான, 'சினிமா கலைக் களஞ்சியம் - ஆரூர்தாஸ்' நுாலிலிருந்து: கதை வசனத்தில், ஆரூர்தாசுக்கு ஈடு இணையில்லை என்பர். அதற்கேற்ப, 800 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.முதன் முதலில் கதை வசனகர்த்தாவான படம், தேவர் பிலிம்சின், வாழ வைத்த தெய்வம். இதில், ஜெமினி கணேசன், சரோஜாதேவி நடித்தனர்.ஆரூர்தாசிடம் ஒரு தனி சிறப்பு உண்டு. தான் எழுதிய கதை, வசனத்தை, ஏற்ற, இறக்கத்துடன், நடிகர் - நடிகையருக்கு, அவரே சொல்லித் தருவார். இது, பலரை கவர்ந்தது. குறிப்பாக, ஜெமினி கணேசனுக்கு மிகவும் பிடித்தது. அன்று முதல், ஆரூர்தாசை, 'வாத்யாரே' என, அழைக்க ஆரம்பித்தார்.'வாத்தியாரே... உணர்ச்சி நிறைந்த உங்க வசனம், எங்களை நடிக்க வைக்குது... வருங்காலத்தில், நீ, பெரிய வசனகர்த்தாவா வருவே... உனக்கு, நல்ல எதிர்காலம் இருக்கு... பார்த்துகிட்டே இரு, நீ பெரிய ஆளா வருவே...' என்றும், அடிக்கடி கூறுவார், ஜெமினி கணேசன்.* ஜெமினி கணேசன், 1947ல், மிஸ் மாலினி படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். 1952ல், தாயுள்ளம் படத்தில், கதாநாயகனாக, ஆர்.எஸ்.மனோகர், கவர்ச்சி வில்லனாக, ஜெமினி கணேசன் நடித்தனர். பின், இருவர் வாழ்க்கையிலுமே திருப்புமுனை. ஜெமினி கணேசன், கதாநாயகன் ஆனார்; ஆர்.எஸ்.மனோகர், வில்லன் ஆனார்.* ஜெமினி கணேசன் இரட்டை வேடம் போட்ட முதல் படம், மனம் போல் மாங்கல்யம். இந்த படத்தில் உடன் நடித்த, சாவித்திரியை மணந்தார்* ஜெமினி கணேசன், சாகச கதாநாயகனாக நடித்த படம், வஞ்சிக்கோட்டை வாலிபன்* பிலிம்பேர் விருது பெற்ற, ஜெமினி கணேசன், நான் அவனில்லை என்ற படத்தை தயாரித்தார்* பத்மினியுடன் அவர் நடித்த முதல் படம், ஆஷாதீபம் என்ற மலையாளப் படம்* ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம், இதயமலர். இந்த படத்தில், ஜெமினி கணேசன், சொந்த குரலில், 'லவ் ஆல்' என ஆரம்பிக்கும், ஒரு பாடல் பாடியுள்ளார். அவர் பாடிய ஒரே பாடலும் அது தான்* வல்லவனுக்கு வல்லவன் படத்தில், வில்லனாக நடித்துள்ளார்* * ஜெமினி கணேசன் நினைவாக, மத்திய அரசு, ஐந்து ரூபாய் தபால் தலை வெளியிட்டுள்ளது* இன்று வரை, பல காதல் படங்களில் பல நாயகர்கள் நடித்திருந்தாலும், 'காதல் மன்னன்' என்றழைக்கப்பட்ட ஒரே நடிகர், ஜெமினி கணேசன் மட்டுமே.குன்றில் குமார் எழுதிய, 'முன்னேற, 30 வழிகள்' நுாலிலிருந்து: இந்தியாவை, ஆங்கிலேயர் ஆண்ட காலம் அது. கோல்கட்டா பிரசிடென்சி கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினார், ஜெகதீஷ் சந்திரபோஸ். அப்போது, அங்கு பணியாற்றிய ஆங்கிலேய பேராசிரியர்களுக்கு, இணையான தகுதியுடன், சிறப்பான திறமை பெற்றிருந்தார்.ஆனாலும், அப்போது, பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்ததால், ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதி தான், இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்தியர் என்ற காரணத்தால், ஜெகதீஷ் சந்திரபோசுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டது.இது, அவருக்கு உறுத்தலாக இருந்தது. இதற்காக, பிரச்னையை பற்றி குமுறி குமுறி கொந்தளிப்பதையும், அவர் விரும்பவில்லை. மாறாக, பிரச்னையை தைரியமாக, காந்திய வழியில் எதிர் கொண்டார்.'ஊதியமே தேவையில்லை...' என்று திட்டவட்டமாக கூறி, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.இவரது நேர்மையையும், திறமையையும் பார்த்த ஆங்கிலேய அரசு, அதன்பின், ஆங்கிலேயர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க முடிவு செய்ததோடு, மூன்றாண்டு நிலுவைத் தொகையையும் சேர்த்து வழங்கியது.நடுத்தெரு நாராயணன்