உள்ளூர் செய்திகள்

திண்ணை!

ஜூன் 18 - தந்தையர் தினம்குழந்தையின் வாழ்க்கையில் தாய்க்கு அடுத்து, தந்தைக்கும் முக்கிய இடம் உண்டு.தந்தையின் பொருளாதாரமும், அறிவும், குழந்தையின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.இது, ஜனாதிபதி முதல், சாதாரண மக்கள் வரை, அனைவருக்கும் பொருந்தும்.அமெரிக்காவை ஆண்ட மிகச்சிறந்த ஜனாதிபதிகளில், ஆப்ரகாம் லிங்கனுக்கு அடுத்து நிற்பவர், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். இவருடைய மகன் தியோடர் ரூஸ்வெல்ட், பின்னாளில், அமெரிக்க ஜனாதிபதியாகி, சிறப்பாக ஆட்சி செய்தார்.எதிலும் உடனடியாக முடிவெடுத்து விட மாட்டார், தியோடர் ரூஸ்வெல்ட். மாறாக, தன் அப்பா பிராங்க்ளின் இதில் என்ன முடிவை எடுத்திருப்பார் என யோசித்து, அதற்கேற்ப முடிவெடுத்து அறிவிப்பார்.அவர் தந்தை பற்றி கேட்டபோது, என்ன சொன்னார் தெரியுமா?'என் தந்தை, தன்னம்பிக்கை மிக்கவர். அவர் எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஆகட்டும், சீர்திருத்தங்கள் ஆகட்டும், அதை அலசி ஆராய்ந்து கச்சிதமாய் முடிவெடுப்பார். என் தந்தைக்கு ஈடு இணையில்லை...' என, புகழ்ந்தார்.இதை விட ஒரு தந்தைக்கு என்ன வேண்டும்!அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு, இரு பெண் குழந்தைகள்.இரு குழந்தைகள் மீதும், ஒபாமாவுக்கு அபார அன்பு. அவர்களுடன் இருக்கும் போது, இவரும் குழந்தையாகி விடுவார்.தன் குழந்தைகளுடன் பொழுதுபோக்க அலுக்காதவர். சிறு வாய்ப்பு கிடைத்தாலும், பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று மகிழ்வார்.அலகாபாத் ஜெயிலில் அடைபட்டிருந்தார், நேரு. உத்தரகண்ட் மாநிலம், முசோரியில் படித்துக் கொண்டிருந்தார், மகள் இந்திரா. நேருவுக்கு எப்போதும், இந்திரா நினைவு தான். சிறையில் இருந்தபடியே அவருக்கு கடிதங்களை எழுதி குவித்தார். அவை புத்தகங்களாக வெளியிட்டபோது, ஆயிரம் பக்கங்களை தாண்டியது.ஒருமுறை இந்திராவிடம், தந்தை நேரு பற்றி கேட்டபோது, 'அவருக்கு என்னைத் தவிர வேற நினைப்பே இல்லை...' என, பாராட்டினார்.ஒரு தந்தைக்கு இதை விட பாராட்டு என்ன இருக்க முடியும்!- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !