உள்ளூர் செய்திகள்

மக்கள் மதிக்கும், மாவோ!

சீனாவின் பழம்பெரும் தலைவரான, மாவோ என்று அழைக்கப்படும், மாவோட்சே துங் சிலை, சீனாவின், ஹுனான் பிரதேசம், ஷவாஷான் நகரில் உள்ளது. மாவோ வசித்த வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ள, சிலை தான், படத்தில் இருப்பது. தினமும், ஆயிரக்கணக்கான மக்கள், இங்கு வந்து மண்டியிட்டு, இவரை வணங்கி செல்கின்றனர். குக்கிராமமாக இருந்த இவ்வூர், இப்போது, புல்லட் ரயில்கள் உலா வரும் பட்டணமாக மாறியிருக்கிறது. இன்று, மாவோ கருத்துகள் ஏற்கப்படா விட்டாலும், இங்குள்ள மக்கள், இவரை மதிக்கின்றனர். — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !