உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாழ்க்கை நாடகம்!* நாடகம் நடக்கிறதுஇயக்குனர் யாரென்று தெரியாமலே!* முகத்திற்கு முன்னேபணக்கட்டுகள்...பிடித்திட ஓடிக்கொண்டேஇருக்கிறேன்!* என் தோளின் மீதுஒருவன் அமர்ந்துஎன் முன்னே பணத்தைகட்டி தொங்கவிட்டுவேடிக்கை பார்க்கிறான்என்பதை அறியாமலே!* பொருளே பிரதானமானபொருளாதார உலகில்உறவுகளோ விலை பொருளாய்!* தகனம் கூட தனமில்லையேல்தாழ்வாரத்தில்உடல் அழுகும்!* சேர்த்து வைத்தபணம் எல்லாம்வெறும் காகிதம்என்று தெரியவரும்முதுமையில்!* நல் உறவுகளைஇளமையில் சேர்த்துவைக்காததால்!* பணத்தை துரத்தும்வாழ்க்கை பயணத்தில்தொலைத்து விட்டஉறவுகளை முதுமையில்தேடி திரிந்துபலனில்லை!* மனிதா...வாழ பணம் தேவை...ஆனால்,பணத்திற்காய்பொய் வேஷம்கட்டுவதைகலைந்து எறி!* வாழ்க்கை நாடகம்காலமெல்லாம் இனிக்கும்!— எஸ்.ஏ.சரவணக்குமார், திருநின்றவூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !