உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காதலோடு வாழ்வோம்!* ஒரு மலர் விட்டுமறு மலர் தாவும்பட்டாம் பூச்சியாய்பறப்பதுஎன்ன மனம்?* கள்ளூறும் மலராய்கன்னி நீ இருக்ககாகித மலரைச்சூடுவதில்ஏது மணம்?* கங்கை நதியாய்காதலி நீ இருக்ககானல் நீரைதேடுவதில்என்ன சுகம்?* உனக்கான பாடல்வடித்து இருக்கஊருக்காக அதைப்பாடுவதில்என்ன பயன்?* உன்னிடம் கொடுக்கஎழுதிய கவிதையைவேறு பெண்ணிடம்படிக்க எண்ணுவதுஎன்ன மனம்?* உன்னோடு வாழமுடியாமல் போனால்உன் நினைவோடுஉலகில் வாழ்வேன்!* துணையாக நீவராது போனால்தனியாக நான்பயணம் செல்வேன்!* ஒன்றைப் பிரிந்துவீழ்வதை விடகாதல் உள்ளதெனகருதுவதே சுகம்!* காதலால் சிலரதுஇதயம் பாதிக்கலாம்கடந்து விட்டால்எதையும் சாதிக்கலாம்!— பா.கபிலன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !