உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

புரிந்து கொள்வாயா?நீநினைத்திருக்க மாட்டாய்...உன்னையேநான்நினைக்கிறேன் என்று!நீகண்டிருக்க மாட்டாய்...உன்னை நான்அணு அணுவாய்ரசிக்கிறேன் என்று!நீயோசித்திருக்க மாட்டாய்...உன்னைப் பற்றியோசிப்பதேஎன் வேலை என்று!நீதெரிந்திருக்க மாட்டாய்...உன் தேவைகள்அனைத்தும்எனக்குத் தெரியும் என்று!நீசிந்தித்திருக்க மாட்டாய்...உன்னைப் பற்றியசிந்தனைகளேஎன் சுவாசம் என்று!நீஅறிந்திருக்க மாட்டாய்...உன்னிடம்என் எதிர்காலத்தைஒப்படைக்கிறேன் என்று!நீஎண்ணியிருக்க மாட்டாய்...உன் எண்ணங்களேஎன்னை உருகுலையசெய்கிறது என்று!நீஉணர்ந்திருக்க மாட்டாய்...உன்உயிருடன், உணர்வுடன்உரிமை கொள்கிறேன் என்று!அனைத்தும்நீ அறிகையில்என்னைஅள்ளி அணைப்பாயா?இல்லை...அறிவீலி எனஎட்டி உதைப்பாயா?எதுவாகிலும்என் காதல் மாறாது...உன் நினைவுகள்என்னை விட்டு அகலாது...புரிந்து கொள்வாயாஎன் அன்பே!— ஆர்.வர்ஷா, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !