கவிதைச்சோலை!
பிழைக்கத் தெரியாத பேதைகள்!சுடுகாட்டுச் சுவரிலும்பிறந்த நாள்வாழ்த்து ஒட்டும்பித்தர்கள் நாம்!திருமண விழாவிலும்கருமாதி செய்தியைசத்தமாய்ப் பேசும்கடமையாளர்கள் நாம்!வழிகாட்டும்சாலை பலகைகளில்விளம்பரம் ஒட்டும்வியாபாரிகள் நாம்!லஞ்சம் பெறுபவனைதிட்டித் தீர்த்துவிட்டுலஞ்சம் கொடுத்தேகாரியம் சாதிக்கும்லட்சியவாதிகள் நாம்!குடிக்காதே என்றுகொள்கை முழக்கமிட்டுகளைப்புக்கு கொஞ்சம்குடித்துக் குதூகலிக்கும்குடிமகன்கள் நாம்!அநியாயம் நடப்பதால்ஆத்திரத்தில் கத்திவிட்டுஅநியாயக்காரர்களின்அரவணைப்பில் கிடக்கிறஅன்பர்கள் நாம்!இந்தியாவில்இப்படியிருந்தால் தான்நாம்...மனிதர்கள் பட்டியலில்!இல்லையேல்...பிழைக்கத் தெரியாதபேதைகளின் பட்டியலில்!— கோ.தமிழரசன், செஞ்சி.