உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அணுநாயகன் அப்துல் கலாம்!மதம் பிடிக்கா மனிதர்மனித நேயப் புருஷர்தமிழ் படித்த விஞ்ஞானிதமிழுக்கு கிடைத்த ஞானி!எத்தனையோ பேர்இப்பதவிக்கு வந்த போதும்நீர் வந்த போது தானேகுடியரசுத் தலைவரென்ற கோபுரப் பதவிசந்தனத்தை பூசிக் கொண்டது!எத்தனையோ பேர்தொட்டுப் போன நாற்காலியில்நீர் அமர்ந்த பின் தானேபட்டுப் பீதாம்பரங்களின்பாரம்பரியத்தை உதறிபருத்தி ஆடையில் பேசிக் கொண்டது!மனப்பாடுகள் தீரமனப்பாடங்கள் தந்தவர்கணப்பாடுகள் மீறகனவு காணச் சொன்னவர்!சின்னத்திரையிலும்,வண்ணத்திரையிலும் நடிக்காமல்எண்ணற்ற இளசுகளின்மனத்திரையிலும், மானசீகத்திலும்வாழ்ந்த கதாநாயகர்!இவரின் வருகைக்கு பின் தான்கரிசல் காட்டுக்கும் கனவு வந்ததுஇவரின் இருக்கைக்குப் பின்தான்இஸ்ரோ தன் சிறகுகளை சிலிர்த்தது!சாமானியனுக்கும்சாம்ராஜ்ய பாஷை சொல்லிக் கொடுத்தசாக்ரட்டீஸ் நீர்சாதிக்கச் சொல்லியேசரித்திரத்தை சரியானபாதைக்கு ஓட்டிய சாரதி நீர்!எவர் வருவர் உம்போல்எவர்வரினும் இணையோ உம்தாள் போல்எம்மான் நீர் வாழ்கஇந்து சமுத்திரமாய்நீர் வாழ்க!— சுசீந்திரன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !