உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பேச்சற்று போனாயே ஜன்னலே!எனக்கும், உனக்கும் தான்எத்தனை சிநேகம்...வெப்ப பொழுதுகள்என் தேகத்தைஎரிக்கும் போதுஆசுவாசம் தந்தது நீ தானே!உன் வலியகைகளை பற்றியவாறுஅந்தி வானத்தைஆகாச நட்சத்திரங்களைஎத்தனை நாட்கள்ஆசையுடன் ரசித்திருக்கிறேன்!காற்றிடம் காதல் கொள்ளவும்காக்கையிடம் கதைகள் பேசவும்மழைச்சாரலில் மனம் மயங்கவும்உன்னிடம் தானேஓடி வருவேன்!அடுப்படிக்குள்சிறைப்பட்டுப் போனசீதைகள்உலகை உள்வாங்கி கொண்டதுஉன்னிடம் தானே!காபி பொடி, சர்க்கரைபக்கத்து வீட்டுபண்டமாற்றுக்கு மட்டுமல்ல...மனம் கனக்கும் வேளைகளிலும்இரு மனங்களின் பகிர்தலுக்குநீ தானே சாட்சி!ஆண்டாண்டு காலமாகஅடிமைப்பட்டு கிடந்தபெண் இனத்திற்குஆசுவாசம் தந்தஜன்னலே...நாகரிக வளர்ச்சியில்மனங்கள் குறுகிகுடும்பங்கள் சிறுத்துபேச்சற்று போனமனிதர்களைப் போலசுற்றிலும் கட்டடங்களுக்குநடுவே சிக்கிநீயும் பேசும் பொருளற்றுப் போனாயே!— ப.லட்சுமி, கோட்டூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !