உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வானம் வசப்படும்!கேள்விக்குறி போல்வளைந்து நெளிந்து போகாதேசற்று நிமிர்ந்து நில்எல்லாருக்கும் நீயே வியப்புக்குறி!கருவில் உருவாகும் போதேவாழ்க்கைப் பாடத்தின்கேள்வியும், பதிலும் எழுதப்பட்டு விடுகிறது...எந்தக் கேள்விக்கு எது பதில்எந்தப் பூட்டுக்கு எது சாவிகண்டுபிடிப்பதே வாழ்க்கைவாழ்க்கையை வென்று முடி!தம்மை புதைக்கப்பட்டதைஎண்ணி விதைகள்பூமிக்குள் முடங்கி விடுவதில்லைவிதைக்கப்பட்டதாய் எண்ணிஉயிர்த்தெழுந்து முட்டி முட்டிவெளியே முகத்தைக் காட்டிதன் முகவரி எழுதுகிறது!தட்டாமல் எந்தக் கதவும் திறக்காதுவலியின்றி எந்தக் குழந்தையும் பிறக்காதுஉளியின் வலி பொறுஅழகான சிலையாவாய்!சோதனை, வேதனை, தோல்விகள்இவையெல்லாம் அவமானங்கள் அல்லஅனுபவங்கள்...அனுபவங்களே ஆசான்கள்வெற்றிக்கு முன் கிடைக்கும் விழுப்புண்கள்!முடியும் என்றால்விடியாத இரவே கிடையாதுஉன்னால் முடியாததுஉலகில் எதுவுமில்லைமுயற்சி தான் முதற்படிஅடுத்து வருவதெல்லாம் வெற்றிப்படி!இதுவரை நீ சுமந்திருந்ததுசிலுவையல்ல...சிறகுகள்!சிறகை விரி, விண்ணில் பறவானம் உன் வசப்படும்!— மீனா சுந்தர், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !