கவிதைச்சோலை!
ஆசுவாசப்படுத்து!நினைவு தெரிந்தநாள் முதல்எனக்கும், உனக்குமானபோராட்டம்ஏதாவது ஒரு வழியில்தொடர்ந்து கொண்டேவருகிறது!இரவிலும், பகலிலும்பூதாகரமான நிழலாகஎன்னை நீ விடுவதேயில்லை!ஆனாலும் எனக்கு எப்போதும்எட்டாத உயரத்திலேயே நீ!இரவில் உன்னைக் காணும் போதுஇன்பமாகவும்...பகலில்கடுமையாகவும் தெரிகிறாய்!இருந்தும் எப்படி எல்லாமோ முயற்சித்துஉன்னை தொடுகிறேன்நீயோ...சில நிமிட சந்தோஷத்தைஇறைத்து விட்டுஇன்னும் விரிந்துகொண்டே போகிறாய்!என் ஆசைக் கனவே...நீ ஏன் என்னுள்கற்பனை வலைகளைவிரித்துக் கொண்டே இருக்கிறாய்...போதும் என்றநிறைவைக் கொடுத்துசிறிது நேரம்என்னை ஆசுவாசப்படுத்து!— ப.லட்சுமி, கோட்டூர்.