கவிதைச்சோலை!
வெளியேறிய வெளிச்சம்!நன்றாய் நினைவிருக்கிறதுநல்லவர்கள் தாம் நாம்!வைத்திருந்தது தொலைந்து விட்டவருத்தத்தில் வாடுகிறோம்!எங்கே தொலைத்தோம்எப்போது தொலைத்தோம்இப்போது நினைத்தாலும்இதயம் கனக்கிறது!எறும்பின் இரைப்பைமேல்இரக்கம் இருந்ததால் தான்மண்ணில் மாக்கோலம்மலர்ந்தது அந்நாளில்...அணுவளவே அதன்வயிறுஅதற்கும் பசிக்குமென்றுதானேஅன்னமிட்டு ஆனந்தித்தோம்!கரையும் காகத்தின் மேல்கருணை பிறந்ததால் தான்சனிக்கிழமைகளில்சாப்பாடு வைக்கிறோம்!பசுவின் மீது உள்ள பாசமேஅகத்திக்கீரையும், கழுநீரும்ஆகாரமாகியது!கொட்டும் குளவியதன்கூட்டைக் கலைப்பதுபாவமென்றேஇருக்கும் வீட்டிலதுகூடு கட்ட அனுமதித்தோம்!ஈசல் புற்றுக்குள்இருக்கும் பாம்பின்மேல்எழுந்த நம்பிக்கையேபாலாய் சொரிந்தது!தூது போன புறாவைதோதான பறவையாக்கிஅமைதியின் சின்னமாகஅடையாளப்படுத்தி வைத்தோம்!எல்லா உயிர்மீதும்இரங்கிய நாமேதான்இன்றோ இரங்குவார் இல்லையெனஇறைவனிடம் இறைஞ்சுகி றோம்!எல்லா வாசலையும்இறுக அடைத்துப் பூட்டிவெளிச்சம் இல்லையெனவெதும்புகிறோம் உள்ளத்துள்!கருணை பிறக்குமிடம்கடவுள் இருக்குமிடம்தூசுதட்டி மீட்டெடுப்போம்தொலைத்துவிட்ட இரக்கத்தை!மீட்டெடுத்தால்...வெளியேறிய வெளிச்சம்வீட்டுக்குள் பிரவேசிக்கும்!— வளர்கவி ராதாகிருஷ்ணன்,கோவை.