கவிதைச்சோலை!
பாடமாய்த் திகழ்வாய்!எப்போதும்இயல்பாய் இருக்கஇயற்கையிடம்கற்றுக்கொள்!உனக்காகஅழுவதைக் காட்டிலும்உனக்காகஉலகம் அழும்படியாய்வாழ்ந்து விட்டுப் போ!காலம் மாறினாலும்திசைகள் தடுமாறினாலும்வாழ்க்கை மாறாமல்அறவழியை நோக்கிபயணமாகு!தோல்வி இல்லாதவாழ்க்கை இல்லை...தோல்வியை கண்டுதுவண்டு விடாமல்காலையில் எழும்கதிரவனாய் நித்தம் எழு...உறுதியாகும்உன் வெற்றி!மனதைஒவ்வொரு நாளும்சலவை செய்...வந்து அமர்வார் கடவுள்!இதயத்தைதாமரையாய் மலர்த்துவந்து படுத்துறங்கும்விரிந்த வானமே!வெயிலென்றுகாய்ந்திட மறுக்காதேமழையென்றுநனையாமல் ஒதுங்கி விடாதேபனியென்றுகுளிர்போக்கத்தீயில் குதிக்காதேகுடையாய் மாற்றுவானத்தையே!படிகளை வெறும்படிகளாக பார்க்காமல்படி படியெனபடித்துப்பார்நீயே நாளைபிறர் படிக்கும்பாடமாய்த் திகழ்வாய்!- ராம.இளங்கோவன், பெங்களூரு.