உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாழ்வின் வசந்தம்!* சின்னச் சின்னவீம்புகள் வாழ்வில்வரவே செய்யும்!* வீம்புகள் என்றும்நிலையானதல்ல..விட்டுக் கொடுத்தல்வீம்புகளை வீழ்த்தும்சக்தி கொண்டது!* சின்னச் சின்னசண்டைகள் வாழ்வில்வரவே செய்யும்!* சண்டைகள் என்றும்நிலையானதல்ல...அனுசரித்துப் போதல்சண்டைகளைசமாதானமாக்கி விடும்சக்தி கொண்டது!* சின்னச் சின்னதர்க்கங்கள் வழ்வில்வரவே செய்யும்!* தர்க்கங்கள் என்றும்நிலையானதல்ல...மவுனித்திருத்தல்தர்க்கங்களைதவிடு பொடியாக்கி விடும்சக்தி கொண்டது!* பூனைகள் வாழும்வீடுகளில் தான்எலிகளும்வாழ்கின்றன!* காலங்காலமாகதொடரும் வாழ்வின்இச்சூட்சுமத்தைபுரிந்து கொண்டாலேபோதும்வாழ்வில் எல்லா நாட்களும்வசந்தம் தான்!- சாய், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !