உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

ஜனநாயகம் விற்பனைக்கு...தேர் வருகிறது என்றால்வாசலில் நீர் தெளித்துவண்ணமிகு கோலமிட்டுஇறைவனை காண காத்திருப்பர்!தேர்தல் வந்து விட்டால்வாசலில் தோரணம் கட்டிகொடிகளின் கோலமிட்டுகாணிக்கை பெற தவமிருப்பர்!வேலை இல்லை என்றுயார் சொன்னது...கொடி பிடித்தால், நுாறுகோஷமிட்டால், இருநுாறு!உங்கள் வீட்டுக்கு, காவிரியாறுஎதிர் வீட்டுக்கு வைகையாறுபக்கத்து வீட்டுக்கு பாலாறு ஓட்டு போட்டா தேனாறு!வங்கியிலே நீங்கபோட்ட பணம் - நாங்கவாரி சுருட்டி போனா - அதுவாரா கடனா மாறும்!குப்பைய கொட்டுவோம்நாங்க!தெருவை கூட்டுவோம்வாங்க!அஞ்சு வருஷம் ஆடுனோம்கூத்து!அலுக்கலையா உங்களுக்குஅத பாத்து!சாமி வந்தா வேட்டுதலைவன் வந்தா வேட்டுதுட்டு வந்தா ஓட்டுபுட்டுகிட்டா கானா பாட்டு!புயலுக்கு பஞ்சமில்லேவயலுக்கு தண்ணியில்லேபடிப்புக்கு மதிப்பில்லேகுடிப்பவனுக்கு ஜாதியில்லே!வரப்பு உயராமல்நீர் உயராமல்நெல் உயராமல் - நாட்டில்குடிகாரனை மட்டும்உயர்த்தி விட்டோம்!கொடியை அசைத்துவாகனத்தை வரவேற்றுசக்கரத்தை வணங்கிஅடிமைத்தனத்தைவளர்த்திடுவோம்...ஜனநாயகத்தைவிலை கொடுத்துவாங்கிடுவோம்!- பாரதி சேகர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !