கவிதைச்சோலை!
எதிரும், புதிரும்...சகிப்புத் தன்மை என்பதுமுள் கிரீடம்...தரித்தாலும் காயமில்லை!விட்டுக் கொடுத்தல் என்பதுவிஷப்பால்...அருந்தினாலும் உயிரிழப்பில்லை!நேசித்தல் என்பதுகசப்புணர்வு...உண்டாலும் ஒவ்வாமையில்லை!பாராட்டு என்பதுஉணர்வுப் பிழை...பிழையால் கஷ்டமில்லை!ஒற்றுமை என்பதுஒரு மின் வேலி...தொட்டாலும் நஷ்டமில்லை!நட்பு என்பதுநெருப்பு...சுட்டால் தான் ஒளிர்வோம்!படிப்பு என்பதுவெள்ளாவி...வெந்தால் தான் மிளிர்வோம்!புன்னகை என்பதுஅணிகலன்...கயவர்களால் கவர முடியாது!நேர்மை என்பதுகல்லறை...துயின்றாலும் இறப்பில்லை!அகிம்சை என்பதுஒரு இம்சை...பட்டாலும் தோல்வி இல்லை!ரவுத்திரம் என்பதுஒரு புயல்...வீசினாலும் சேதமில்லை!வாழ்க்கை என்பதுஒரு பூங்காற்று...நாம் ஆழ்ந்து சுவாசித்தால் தான்அது வசப்படும்!- கோ. சந்திரன், சென்னை.