கவிதைச்சோலை!
பல்லாண்டு பாடுங்கள்!வெள்ளிப் பனி இமயம்வீர குமரி முனைஅள்ளக் குறையாதஅழகு வள திருதேசம்!பின்னிப் பிணைந்திருக்கும்பிரமிப்பு கலாசாரம்தன்நிகர் இல்லாததனி தேசம் நம் தேசம்!உண்ணக் கொடுத்துதவிஉறங்கும்போது தலை தடவிமின்னும் உடை நல்கிமென்மை தரும் இத்தேசம்!தன்னை மதித்தவருக்கும்தவறுதலாய் நடந்தவருக்கும்அன்னை போல், அன்பு காட்டிஅரவணைக்கும் ஒரு தேசம்!அடிமை வயப்பட்டுஅடிதடிகள் பல பட்டுவிடியலை கண்டதொருவெற்றி திருத்தேசம்முந்திய தலைமுறையின்முயற்சியால் பெற்ற கனிஇந்த தலைமுறைக்குஇனிக்குமோ, கசக்குமோ!அன்னை தேசமிதைஆராதித்துப் போற்றுவதேமுந்தைய தலைமுறைக்குமுறையான கைமாறு!அடுத்த தலைமுறையும்ஆனந்தமாய் இந்தசொந்த திருநாட்டில்சுகித்திருக்க வேண்டாமா?சொல்லி வளர்த்திடுங்கள்சுதந்திர பாரதத்தின்சொல்லில் வடிக்கவொண்ணாசுதந்திரப் பெருமையை!அன்னை பாரதத்தின்அன்னத்தை புசித்த கடன்என்ன சொல்லி பாடினாலும்ஈடுசெய்ய முடியாது!உலக நாடுகளின் ஒப்பற்ற திலகமாகஎன்றும் இத்தேசம் இருந்து செழிப்பதற்குஅழகு பிள்ளைகளே, அணிவகுத்து நின்றபடிபாரதத்தை வாழ்த்தி பல்லாண்டு பாடுங்கள்!பிரேம்குமார், உடுமலை.