கவிதைச்சோலை!
தேடலில் தொலையுது, வாழ்க்கை!சிரிக்கும்போதுசிறகுகள் தேடிசேர்ந்து பறக்க ஜோடிகள் தேடி!அழும்போதுஅறை கதவு மூடிஅணைக்க தலையணை தேடி!உண்ணும்போதுஉரைப்புக்கு கொஞ்சம்ஊறுகாய் தேடி!தனித்து இருக்கையில்துணைக்கு வரகனவுகள் தேடி!கூட்டத்தின் நடுவேகுமைந்து போய்தனிமை தேடி!வாழ்வதற்கு வழி தேடிவாழ்வு வந்த பின்வசதி தேடி!வாழ... வாழ...வேதனை சேர...வேண்டி வேண்டி நிம்மதி தேடி!தேடி... தேடி...தொலையுதடா வாழ்க்கைதேடல் ஒன்று தான், நாம்தேடி வாழும் வாழ்க்கை!- கி. புஷ்பலதா, சென்னை.