கவிதைச்சோலை
அய்யம் விட்டு வாழ்!மூளை வளர்ச்சியின் முட்டுக்கட்டைசந்தேகம்!அது - சாத்தான் வழங்கும்வரம்!மனதை அரிக்கும்மாயக் கரையான்!நித்திரை கெடுக்கும்நித்திய சாபம்!தலைமுறைக்கும் பாவங்களைதருவிக்கும் தவறு!அப்பிய நேரத்தில்சிகப்பைச் சேர்த்துகால மாற்றத்தில்கறுத்து விடும் மருதாணி!பற்ற வைத்தவன்பதுங்கிக் கொள்ளஎரிக்க இடமளித்தவனைதகிக்கும் மயானம்!ஒளியில்லா இதயங்களில்இதன் கரு ஊடுருவிஒளிமிக்க வாழ்வைஒழித்துக் கட்டிவிடும்!தன்னை நம்பாதவர்களையேசந்தேகம்தான் வளரபெரிதும் நம்புகிறது!வாழ்க்கைஇறைவன் வழங்கிய கொடைஅதை -அற்ப சந்தேகங்களுக்குஆகுதியாக்குபவர்கள்சந்தோஷத்தை சந்திக்காமலேயேசமாதியாகி விடுகின்றனர்!விட்டு வாழ வேண்டியதுஆசையை மட்டுமல்ல'அய்யத்தை'யும் தான்!வளர்கவி, கோவை