உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

உழைப்பால் வாழ்க்கை இனிக்கிறது!அன்பும், கோபமும்எல்லாரிடமும் இருக்கிறதுஏழைகளிடம் காட்டுவதற்கேஅன்பு என்று பெயர்!பாசமும், வெறுப்பும்எல்லாரிடமும் இருக்கிறதுஅனாதைகளிடம் காட்டுவதற்கேபாசம் என்று பெயர்!பணமும், நேசமும்எல்லாரிடமும் இருக்கிறதுபணியாளரிடம் காட்டுவதற்கேநேசம் என்று பெயர்!அறிவும், அடக்கமும்எல்லாரிடமும் இருக்கிறதுமுதலாளியை மதிப்பதற்கேஅடக்கம் என்று பெயர்!உழைப்பும், திறமையும்எல்லாரிடமும் இருக்கிறதுஉச்சத்தை தொடுவதற்கேதிறமை என்று பெயர்!இன்பமும், துன்பமும்எல்லாருக்கும் இருக்கிறதுதுன்பத்தை மறைப்பதற்கேஇன்பம் என்று பெயர்!இல்லறமும், துறவறமும்எல்லாருக்கும் தெரிகிறதுஇருப்பதை இழப்பதற்கேதுறவறம் என்று பெயர்!ஆசையும், பொறாமையும்எல்லாரிடமும் இருக்கிறதுஅடைய முடியாததற்கேபொறாமை என்று பெயர்!தீமை, நன்மைஎல்லாரிடமும் இருக்கிறதுதீமையை மறப்பதற்கேநன்மை என்று பெயர்!எண்ணம், மனம்எல்லாரிடமும் இருக்கிறதுகுறைகளை களைவதற்கேமனம் என்று பெயர்!தோல்வியும், வெற்றியும்எல்லாருக்கும் இருக்கிறதுதவறுகளை ஒழிப்பதற்கேவெற்றி என்று பெயர்!வரவும், செலவும்எல்லாருக்கும் இருக்கிறதுவரவை பெருக்கும் உழைப்பால்வாழ்க்கை இனிக்கிறது!பாரதி சேகர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !