உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

கேட்டுப் பார்!பூக்களிடம் கேட்டுப் பார்மரணமே எதிர் வந்தாலும்சிரிக்க சொல்லித் தரும்!அலைகளிடம் கேட்டுப் பார்எத்தனை தடை வந்தாலும்போராட சொல்லித் தரும்!தென்றலிடம் கேட்டுப் பார்எதிரியையும் குளிர்ச்சியாகதழுவச் சொல்லித் தரும்!மரங்களிடம் கேட்டுப் பார்வெட்டினாலும் மீண்டும் துளிர்த்துபயன் தர சொல்லித் தரும்!நீர் வீழ்ச்சியிடம் கேட்டுப் பார்வீழ்ச்சி என்றாலும்அபார வளர்ச்சி பெற சொல்லித் தரும்!சூரியனிடம் கேட்டுப் பார்வாழ்க்கை இருள் நிறைந்தாலும்அதை ஓட விரட்டச் சொல்லித் தரும்!எறும்புகளிடம் கேட்டுப் பார்எத்தனை இடர் வரினும்ஒழுங்காக வாழச் சொல்லித் தரும்!நாயிடம் கேட்டுப் பார்நிராகரிப்பு நிகழ்ந்தாலும்நன்றி காட்ட சொல்லித் தரும்!மனிதாபிரபஞ்சத்திடம் கேட்டுப் பார்நீ சாதனையாளனாகும்வழியை சொல்லித் தரும்!ஏ. மூர்த்தி, திருவள்ளூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !