உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

அவளை பார்த்த ஞாபகத்தில்...* அவளைப் பார்த்த அந்த நொடிஉயிரில் ஜீவநதி உருண்டோடிஉயிர் மலரக் கண்டேன்!* ஊரே தூங்கும் போது...இமை மூடாதிருந்தேன்...உள்ளத்தில் அவளை வைத்துஉலகத்தை மறந்து போனேன்,அவளை பார்த்த ஞாபகத்தில்!* வெள்ளை அணு, சிவப்பணுசண்டையிட்டு காதலாகி காதலின் காலடியில் கண்கள் பூத்து நின்றேன்,அவளை பார்த்த ஞாபகத்தில்...* தனிமை உணர்வுகளை ரசித்து,தனியே பேசி சிரித்து,வெட்கம் மறந்து,வினாடிக்குள் கரைந்து போனேன்,அவளை பார்த்த ஞாபகத்தில்!* மின்னல்கள் கூத்தாடி கண்கள் கொய்து போனாள் -அந்தபூகம்ப அலைகளில் புன்னகை மறந்து போனேன்,அவளை பார்த்த ஞாபகத்தில்!* இரவில் கதிரவனையும், பகலில் நிலவையும் தேடும்விசித்திரமான வியாதிக்குள்வீழ்ந்து கிடந்தேன், அவளை பார்த்த ஞாபகத்தில்!* கிறுக்கல்கள் கவிதையெனஉணர்ந்தேன்... கிழக்கு வெளுக்கும் முன்விழித்தெழுந்தேன், அவளை பார்த்த ஞாபகத்தில்!* தாயின் கருவறைக்குள் ஈரைந்து மாதம் இருந்த இன்பம் போல் இருந்தது, அவளை பார்த்த அந்த நொடி!* உயிரின் ஈரம்உலர்ந்து போகுமுன் மீண்டும் ஒரு முறைபார்ப்பேனா அவளை!* அவள் நினைவுகளே வாழ்க்கை என்றான பிறகு,அவள் தொடும் தூரத்தில்இருந்தாலென்ன... தொலை தூரத்தில் இருந்தாலென்ன!— க.மோகன், அறந்தாங்கி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !