உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இதுவே வாழ்க்கை!சில காயங்கள் மருந்தால் சரியாகும்சில காயங்கள் மறந்தால் சரியாகும்! வறுமை வந்தால் வாடக் கூடாதுவசதி வந்தால் ஆடக் கூடாது!வியர்வை துளிகள் உப்பாக இருக்கலாம்ஆனால், அவை வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்!வீரன் சாவதில்லைகோழை வாழ்வதே இல்லை!உன்னை நீ செதுக்கிக் கொண்டே இருவெற்றி பெற்றால் சிலைதோல்வி அடைந்தால் சிற்பி!மனிதனுக்கு, 'ஏபிசிடி' தெரியும்ஆனா, 'கியூ'ல போக தெரியாதுஎறும்புகளுக்கு, 'ஏபிசிடி' தெரியாதுஆனா, 'கியூ'ல போக தெரியும்!உண்மை எப்போதும் சுருக்கமாக பேசப்படுகிறதுபொய் எப்போதும் விரிவாக பேசப்படுகிறது!பேசிப் பேசியே நம்மை ஏமாற்றுகின்றனர்என்பதெல்லாம் பொய்!அவர்கள் பேச்சில்,நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே உண்மை!குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகிறான்குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்!கடனாக இருந்தாலும் சரி அன்பாக இருந்தாலும் சரி திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு!உறவினர்களில் யார் முக்கியம் என்பதைஉயிரற்ற பணமே முடிவு செய்கிறது!பணம் கொடுத்து பார்உறவுகள் உன்னை போற்றும்கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப் பார்மண்ணை வாரி துாற்றும்!அறுந்து போன செருப்புக்கு கூடவீட்டில் ஒரு இடம் உண்டுஇறந்து போன மனித உடலுக்குவீட்டில் ஒரு இடமும் இல்லை!இது தான் உண்மைஇதுவே வாழ்க்கை!எம். அசோக்ராஜா, திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !