கவிதைச்சோலை!
வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால்சமைக்கும் பொருட்கள் தீய்ந்து விடும்உரிய நேரத்தில் செய்யப்படாதிருந்தால்உயரிய பணிகள் தேய்ந்து விடும்!உங்களது உன்னத சிறகுகளின்உயரம் அகலம் தெரியாமல்ஊர்க்குருவிகள் போலஉள்ளுக்குள்ளே மட்டும் சுற்றுவது ஏன்?அணுகுண்டு தயாரிக்கக் கூடியஆற்றல் உங்களுக்குள் இருக்கையில்கோலிக்குண்டு விளையாடிகாலத்தை வீணாக்கலாமா?விண்ணின் நட்சத்திரப் பூக்களையே பறிக்கும்வீரியம் உங்களுக்குள் இருக்கையில்நெருஞ்சிப் பூக்களைப் பறிக்கநெருங்கிப் போவது ஏன்?வாழ்க்கை எனும் கடற்கரையில்வந்து சேரும் கிளிஞ்சல்களைப் பொறுக்காமல்ஆழ்க்கடலில் மூழ்கி எழுந்துஅழகான முத்தெடுக்க வேண்டாமா?துளையிடப்பட்டாலும் துன்பத்தைத் தாங்கிதுாய இசை எழுப்பும் புல்லாங்குழல் போல்தோல்விகள் எத்தனை வந்தாலும்தொடர்ந்து முயற்சிப்பதே வாழ்க்கை!உளியின் வலிக்கு பயந்த கல்ஒருபோதும் சிற்பம் ஆவதில்லைசவால்களைச் சந்திக்காத வாழ்க்கைசாதனைகளை ஒருபோதும் படைப்பதில்லை!சாவிகள் இல்லாத பூட்டுகள்எங்கேயும் தயாரிக்கப்படுவதில்லைதீர்வுகள் இல்லாத பிரச்னைகள்எப்போதும் ஏற்படுவதில்லை!அடுத்த தாகத்துக்கான தண்ணீரைஇப்போதே குடிக்க முடியாதுஎப்போதோ துன்பம் வருமென்றுஇப்போதே அழுது புலம்பலாமா?வெட்டிக் கவலைகளை வீசியெறியுங்கள்சட்டைப் பையில் இருக்கும் பேனா போல்மட்டற்ற மகிழ்ச்சி எப்போதும்மனதில் இருக்கட்டும்!இளசை சுந்தரம், மதுரை