கவிதைச்சோலை!
நமது செயல்...மேகம் மழை தான் பொழியும்தாகம் போக்கிக் கொள்வதுநமது செயல்!மரம் நிழல் தான் தரும்ஒதுங்கி களைப்பு போக்குவதுநமது செயல்!தென்றல் சுகமாய் தான் வீசும்ஜன்னலை திறக்க வேண்டியதுநமது செயல்!வாழ்க்கை அனுபவம் தான் தரும்உணர்ந்து வாழ வேண்டியதுநமது செயல்!சந்தனம் வாசனை தான் பரப்பும்முகர்ந்து மகிழ வேண்டியதுநமது செயல்!சூரியன் வெளிச்சம் தான் தரும்சரியான பாதையில் செல்வதுநமது செயல்!நிலம் பயிரிடத்தான் உதவிடும்உழுது, நீரூற்ற வேண்டியதுநமது செயல்!நிலவு குளிர்ச்சி தான் வீசும்அனுபவித்து மகிழ வேண்டியதுநமது செயல்!எஸ். குமாரகிருஷ்ணன், புதுச்சேரி.