கவிதைச்சோலை!
சிந்தித்து செயல்படுங்கள்!யாரெல்லாம்நம்மோடு இருப்பர்விலகுவர் என்றுகாலம் முடிவு செய்வதில்லை...அவரவர்களின் வார்த்தையும்நடத்தையும் தான் முடிவு செய்கிறது!வாய் தவறி விழும்பேச்சுக்கள்கை தவறி விழும்கண்ணாடியை விடகூர்மையானது!யாரிடம் பேசுகிறோம்என்பதை விடஎன்ன பேசுகிறோம்என்பதை அறிந்து பேசுங்கள்!தன்னுடைய செயலும்வார்த்தைகளும்மட்டும் தான் சரியென்றுவாதாடுபவர்கள் மத்தியில்அமைதியை மட்டும்உங்கள் ஆயுதமாகவைத்துக் கொள்ளுங்கள்!இதுவும் கடந்து போகும்அது பழமொழிஇதுவும் பழகிப் போகும்இது புதுமொழி!ஒவ்வொரு சோகமும்துன்பமும்வாழ்க்கையில்நல்ல பாடத்தைகற்றுத் தரவே வருகிறது!யாரும் உங்கள்கவலைகளை பார்ப்பதில்லையாரும் உங்கள்வலிகளை பார்ப்பதில்லைஆனால், எல்லாரும்உங்கள் தவறை மட்டுமேபார்ப்பர்!மனிதனும்வாழை மரமும்ஒன்று தான்...தேவைப்படும் வரைவைத்திருப்பர்தேவை முடிந்தவுடன்வெட்டி வீசி விடுவர்!சிந்தித்து செயல்படுவோம்!கே. கோபாலன், சென்னை.