கவிதைச்சோலை!
நம்பிக்கை!வானத்தை தொட்டு விடலாம்என்ற நம்பிக்கையில்தான்மண்ணுக்குள் புதைந்திருக்கும்விதைகள் முளைக்கின்றன!மறுபடியும் புதிய இலைகள்துளிர்க்கும் என்று நம்பித்தான்மரங்கள் எல்லாம்இலைகளை உதிர்க்கின்றன!பறந்து சென்ற தாய்ப்பறவைஉணவுடன் திரும்பி வரும்என்று நம்பியபடியேகுஞ்சுகள் காத்திருக்கின்றன!விலை உயர்ந்த முத்துகள்கிடைக்கும் என்று நம்பித்தான்ஆழமான கடலுக்குள்மூச்சடக்கிச் செல்கின்றனர்!பெரிய மீன்கள் வருமென்றுகொக்குகள் நம்புவதால் தான்ஒற்றைக் காலில் நின்றுஅசையாமல் தவமிருக்கின்றன!அடுத்தமுறை அறுந்து விடாதுஎன்ற உறுதியான நம்பிக்கையில்மறுபடியும் மறுபடியும்சிலந்திகள் வலை பின்னுகின்றன!நம்பிக்கை மட்டுமே போதாதுமுயற்சியும் இருந்தால்தான்முன்னேறிச் செல்ல முடியும்நம்பி முயல்வோம், வெற்றி பெறுவோம்!எஸ். குமாரகிருஷ்ணன், புதுச்சேரி.