உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

என் மனமே!மேடும் பள்ளமும் வாழ்வில் உண்டுதடைகள் பலவும் வழியில் கண்டுதிகையாத உள்ளத்தை நீயும் கொண்டுமுன்னோக்கி செல்ல முயன்றிடு மனமே!எதிரும் புதிருமாய் மக்களின் கூட்டம்ஏகமாய் எழும்பி எதிராய் நின்றாலும்லட்சியப் பாதையில் சற்றும் விலகாமல்உன்னத நோக்கத்தை அடைந்திடு மனமே!ஊன வார்த்தையில் உயிரை கொல்லும்நஞ்சு மனிதர்கள் வாழும் உலகில்தளரா நம்பிக்கையை தாயின் பாலாய்ஊட்டும் உறவினில் மகிழ்ந்திடு மனமே!ரத்தம் உறிஞ்சும் அட்டை மனிதர்கள்குணத்தில் பச்சோந்தி நிறம் கொண்டோர்நித்தம் பொய்கள் பேசும் அசுத்தர்கள்வசிக்கும் பூமியில் விழித்திடு தினமே!அவசிய தேவைகள் மட்டும் இருந்தால் போதும்வாழ்வும் வசிப்பும் இனிமை கொள்ளும்எளியோர் துயரை துடைக்கும் உள்ளமோஅனுதினம் மனதில் நுகரும் பேரின்பமே!இச்சகம் பேசும் மடமையின் உலகில்அச்சமின்றி ஆச்சரிய வாழ்வு வாழ்ந்திடலட்சியம் உச்சமாய் கொண்டு உயர்ந்திடவாழ்ந்து காட்டுவோம் வந்திடு மனமே!சங்கீதா சுரேஷ், தருமபுரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !