உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எப்படியாவது...நொடிக்கு நொடிமாறும் மனநிலைகொண்ட மனித கூட்டம்'எப்படியாவது...' என்ற ஆயுதத்தைகையிலெடுத்து விட்டது!எப்படியாவது...இந்த பள்ளியில்இந்த கல்லுாரியில்'சீட்' வாங்கிடவேண்டுமென்று!எப்படியாவது...என்ன பரிகாரம் செய்தாவதுஜாதகத்தை திருத்தியாவதுவிரும்பிய இடத்தில்விரும்பிய பெண்ணைமண முடித்துவிடவேண்டுமென்று!எப்படியாவது...எந்த வழியிலும் சென்றுஉயர் மதிப்பெண்எடுத்து விடவேண்டுமென்று!எப்படியாவது...ஆயிரம் சந்து பொந்துகள்புகுந்தாவதுலஞ்சம் கொடுத்தாவதுவிரும்பிய வேலையைவாங்கிட வேண்டுமென்று!எப்படியாவது...இந்த தேர்தலில்ஓட்டுக்குப்பணம் கொடுத்தாவதுவெற்றியைவசமாக்க வேண்டுமென்று!இன்றைய தலைமுறையைஎப்படியாவதுஆட்டிப் படைக்கிறது!எப்படியாவது...என்பது தட்டிப் பறிப்பதாகும்!இப்படித்தான் வாழ வேண்டும்இப்படித்தான் படிக்க வேண்டுமென'இப்படித்தான்' என்றமனநிலைக்கு மாறிடஎல்லாருக்கும்எல்லாமும் கிடைக்குமே!வி.எஸ். ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !