கவிதைச்சோலை - ஊனம் !
*ஊனம் என்பதுநமக்குஉடலில் மட்டும்தான்...உள்ளத்திலோநாம்ஒலிம்பிக் வீரர்கள்!*கவலைகொள்ளாதே...தேய்பிறையிலும்நிலா அழகுதான்!*மகிழ்ச்சி கொள்...நட்சத்திரங்களைநம்பிவானம் இல்லை...ஆனால்,நம்மை நம்பிஉலகம் இருக்கிறது!*கவனம் கொள்...கிளை ஒடிந்தாலும்கனிகள் தரமரம் மறுப்பதில்லை!* உறுதிகொள்...வால் அறுந்தபல்லிக்குத்தான்வலிமை அதிகம்!*உற்சாகம் கொள்...துளையிட்டபிறகுதான்புல்லாங்குழலாய்பூபாளம்இசைக்கிறதுமூங்கில்!*நாம்சாய்ந்துநடந்தாலும்...நம் சாதனைகளால்நிமிர்ந்தே நிற்போம்!*கைகள்இல்லாமல்போனாலும்...நம்பிக்கையால்நாம்வெற்றி கொள்வோம்!*கால்கள்இரண்டும்இல்லாமல் போனாலும்...தன்னம்பிக்கையால்இந்தத்தரணியை வெல்வோம்!*குள்ளமாய்நாம் இருந்தாலும்...நம் முயற்சியால்சிகரம் தொடுவோம்!* பேச முடியாதவர்களாகநாம்இருந்தாலும்...நம் வெற்றிகளால்இந்த உலகம்நம்மை பேசட்டும்!*வெட்டிய பிறகுதான்சந்தனமேமணக்கிறது...பார்க்க முடியாதவர்களாகநாம்இருந்தாலும்...நம் சாதனைகளைஇந்த உலகம்பார்க்கட்டும்!*மாற்றுத் திறன்கொண்டவர்கள் நாம்...இந்தஉலகத்தையேமாற்றி அமைப்போம்!— மின்னல் பிரியன், சென்னை.