உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - பூக்களின் பூசல்!

முழம் கூந்தலில்மும்முழம் பூச்சூடியிருந்தாள் அவள்மல்லிகை கனகாம்பரம் காக்கணாம் எனகதம்பச் சரமாய்பின் முதுகில் விட்டிருந்தாள்!வாசமில்லா மலர் நீ வாயெல்லாம் சிரிப்பெதற்கு?காக்கணாம் பூவிடம்கதை கதைத்தது மல்லிகைகனகாம்பரத்தில் என்ன வாழுதாம்?அது காகிதப் பூவிற்கு சமமேஎள்ளி நகைத்தது காக்கணாம் பூ!தன் குற்றம் மறைத்துமாற்றானைக் காட்டுவதுகழுவில் ஏற்றப்பட வேண்டிய செயல் அல்லவா?கருத்துரைக்க வந்தது கனகாம்பரம்!உங்கள் பூசல் உங்களோடுவலிந்தென்னை வம்பிழுக்க வேண்டாம்கனகாம்பரம் குரலில் கண்ணியம் தெரிந்தது!ஈசலைப் போல ஒரு நாள் வாழ்வு உனக்குநான் என்ன அப்படியா?காக்கணாம் பூவின் குரலில் கர்வம் தெரிந்தது!ஒரு நாள் வாழ்வெனினும்உன்னதமான வாழ்வெனக்குகடவுளிடம் பேச நானேதட்டில் அர்ச்சனை பூவாகிறேன்கழுத்தில் மணமக்களுக்கு காதலாய் மணக்கிறேன்பெருமிதத்தில் கூடுதல் வாசம் தெரிந்தது மல்லிகையிடம்!நான் மட்டும் என்ன நீ உச்சாணி விலையில் ஏறிஉட்கார்ந்திருக்கும் வேளையில்உன் பிரதிபலிப்பாய்தானே இருக்கிறேன்நிதர்சனத்தை நிலைநாட்டியது காக்கணாம் பூ!மெல்லினமாய் குறைந்தவள் நான்வண்ணத்தில் மட்டும் அல்ல எண்ணத்திலும் சிறந்தவள்கடவுளிடம் போகாவிட்டால் என்னஎனக்கான வாழ்வைநான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்புத்தரின் போதனைகளைப் படித்தது போல் பேசியது காவி கனகாம்பரம்!ஏம்மா வாடிப் போன பூவைஎதுக்கு இப்படி வண்டிக்கணக்காய் சுமக்கிறே?வாழ்ந்து கெட்ட கிழவி ஒருத்திவார்த்தையால் கொளுத்திப் போடகூந்தலில் ஆடிய பூக்களைநொடியில் குப்பையில் போட்டுப் போனாள் அவள்!-இ.எஸ். லலிதாமதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !