கவிதைச்சோலை! - வா வாழ்ந்து பார்க்கலாம்!
வாழ்க்கை அழகான கவிதைவாசிக்கவும் செய்யலாம்கசக்கி துாரவீசவும் செய்யலாம்!உயிர் சுழற்சிகாமம் சம்பந்தப்பட்டதுகாமம் மனம் சம்பந்தப்பட்டது!அடுத்தவனின் மரணம்தரும் பயம்வாழ்க்கையை சொல்லித் தரும்!பயந்த மனம்இறந்த கால நினைவுகளில்ஆறுதல் தேடும்எதிர்கால கனவில்ஒளிந்து கொள்ள பார்க்கும்நிகழ் காலம் மட்டும்எட்டிக்காயாய்...தன்னை பதிவு செய்து கொள்ளும்போராட்டத்தில்பல முகங்கள் சூடிதான் தொலைந்து போனபரிதாபம்!வீணான மிச்சங்கள் கூட சில உயிர்களுக்குஉணவாகும்வீணாய் முடங்கிக் கிடப்பவன்தனக்கே சுமையாவான்!முட்டி, முட்டி ஓட்டைஉடைத்துத்தான்கோழி குஞ்சு கூடவெளிக்காற்றை சுவாசிக்கிறது!உன் வாழ்க்கைஉன் முன்னேவாழ்க்கை அழகான கவிதைவாசிக்கவும் செய்யலாம்கசக்கி துாரவீசவும் செய்யலாம்!கடைசி நாளில்சிலரின் கண்ணீர் துளிகள்தான் வாழ்ந்த நாளில்நாம் சேர்த்து வைத்த சொத்துவா மனிதனாய்வாழ்ந்து பார்க்கலாம்!எஸ்.ஏ. சரவணக்குமார், சென்னை.