உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை! - தோழமைக்கு...

இறைவன்அளவுக்கு மீறியசோதனைகள் செய்வதாகஅலுத்துக் கொள்ளாதேதோழா!உன்னைஉயிர்ப்போடு வைத்திருக்கபடைத்தவன்கைவசம் வைத்திருக்கும்ரகசியம் அது!கடந்து போனகாலங்களின்கல்லறையில் நின்றுநீகதறியது போதும்!உன் இருப்பைநிலை நாட்டநிஜத்தின் யதார்த்தத்திற்குஇறங்கி வா!நீகண்டுகளிக்கஎத்தனை எத்தனைஇயற்கைக் காட்சிகள்!நீகேட்டு ரசிக்கஎத்தனை எத்தனைபட்சிகளின் கானங்கள்!நீஉண்டு ருசிக்கஎத்தனை எத்தனைகனி வகைகள்!நீ முகர்ந்து மகிழஎத்தனை எத்தனைமலர்களின் கூட்டங்கள்!நீ பழகிப் பார்க்கஎத்தனை எத்தனைஜன சமுத்திரங்கள்!சின்னஞ் சிறுசிறகுக் கொண்டுவிண்ணளக்க விரையும்சிட்டுக் குருவியின்நம்பிக்கையைப் பார்...இப்போது சொல்நீவாழ்ந்ததற்கானதடயங்களைபூமிப் பந்தில்எவ்விதம் பதியவைக்கப் போகிறாய்?சு. கல்யாண சுந்தரம், கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !